Last Updated:
டி20 உலக்கோப்பை தொடரில் மிக முக்கியமான மேட்சாக ஜிம்பாப்வே போட்டி மாறியுள்ளது. அதற்கு காரணம் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறும்.
20 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெறுவதை தீர்மானிக்கும் முக்கியப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று 3 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் காலை 11 மணிக்கு, குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூஸிலாந்து – கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி கண்டுள்ள நியூஸிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
மும்பையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இன்னொரு போட்டியில் சி பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து, நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்த பிரிவில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
டி20 உலக்கோப்பை தொடரில் மிக முக்கியமான மேட்சாக ஜிம்பாப்வே போட்டி மாறியுள்ளது. அதற்கு காரணம் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறும். இலங்கையின் பாலகொல்லா மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோத உள்ளன.
இதில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதேநேரம் இதே பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்படும். பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியா நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 2 தோல்வி மற்றும் 1 வெற்றி உடன் பி பிரிவில் ஆஸ்திரேலியா 3 ஆவது இடத்தில் உள்ளது.


