ஜிம்பாப்வே சூப்பர் 8க்கு முன்னேறினால், பிப்ரவரி 26 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் அந்நாடு இந்தியாவை எதிர்கொள்ளும். அல்லது தோற்றால் முடிவுகளை பொறுத்து ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா விளையாடும். எனவே, இன்று நடக்கும் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால், இந்தியா சூப்பர்-8 சுற்றில் ஒரு சுலபமான சவாலை எதிர்கொள்ளும். மாறாக ஆஸ்திரேலியா உள்ளே வந்தால், அது இந்தியாவிற்குச் சவாலாக அமையும்.


