நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வழங்க தயாராகி வருகிறது. அந்த வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், அடுத்த தவணை நிதியை வெளியிடுவது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதல் வாரத்திலேயே விவசாயிகளின் கணக்குகளில் ரூ.2,000 டெபாசிட் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது 22வது தவணை ஆகும்.


