இலங்கையின் கிழக்குக் கரையில், திருகோணமலைச் சுவாமி மலையின் உச்சியில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மைமிக்க சிவத்தலமே திருக்கோணேஸ்வரம்.
தட்சிண கயிலாயம் எனப் போற்றப்படும் இத்தலம், கி.மு காலத்திலிருந்தே ஈழத்துத் தமிழர்களின் ஆன்மீக மற்றும் கலாசார மையமாகத் திகழ்ந்து வருகிறது.
நாயன்மார்களால் பாடல் பெற்ற பெருமையும், மன்னர் இராவணனின் தொன்மக் கதைகளும் பிணைந்துள்ள இவ்வாலயம், கடலுக்கு மேலான ஒரு இயற்கை அதிசயமாகும்.
போர்த்துகேயர் காலத்துப் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட போதிலும், கடலடியில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளைக் கொண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த ஒரு வரலாற்றுச் சின்னம் இது.
ஈழத்தின் ஆன்மீக அடையாளமாகவும் மற்றும் உலகளாவிய இந்துக்களின் புனிதத் தலமாகவும் விளங்கும் லங்காசிறி வழங்கும் திருக்கோணேஸ்வரத்தின் ஆவணப் பதிவே இது….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

