அமெரிக்கா முன்வைத்த அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் 1.5 வீதம் மட்டுமே செறிவூட்டலுடன் தொடர வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டது.
அத்தோடு, ஈரான் 60 வீதத்திற்கு செறிவூட்டப்பட்ட 400 கிலோகிராம் யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும்.
ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்கா தடைகளை நீக்காது, ஈரானை தாக்குவதை மட்டுமே தவிர்க்கும் எனவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், ஈரான் இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|

