Last Updated:
போட்டி நாளை இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியில் ஒரு பவுலர் பாகிஸ்தானுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் கூறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.
இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களிலம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையாக காணலாம். இந்த மேட்ச்சினை இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அதிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள மேட்ச்சில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை விடவும் குல்தீப் யாதவ் பாகிஸ்தான் அணிக்கு அதிக அச்சுறுத்தலாக இருப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்தியாவின் சுழற்பந்து வீச்சு பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். பாகிஸ்தான் பேட்டர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தந்திரங்கள் மற்றும் பந்துவீச்சில் அவர்கள் காட்டும் மாறுபாடுகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி அளிக்கும் சவால்கள் பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். இந்திய அணிக்காக குல்தீப் யாதவ் நிச்சயம் விளையாட வேண்டும் என்று நான் விரும்புவேன். மற்ற இந்திய பந்துவீச்சாளர்களை விட குல்தீப் யாதவ்தான் பாகிஸ்தானுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.


