இலங்கை சம சமாஜ்வா கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (14) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிச் சடங்குகள் நாளை மறுநாள் (16) பொரளை பொது மயானத்தில் நடைபெற உள்ளன.
அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக நாள் முழுவதும் பொரளையில் உள்ள என்.எம். பெரேரா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் ஏற்பட்ட மரணம்
நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (13) கோட்டே, நாவல வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 92.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

