• Login
Saturday, February 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கும் அநுர அரசு : அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச

GenevaTimes by GenevaTimes
February 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கும் அநுர அரசு : அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 திட்டமிட்டுள்ள ஒப்பந்தம்

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கும் அநுர அரசு : அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச | Handing Over Kankesanthurai Trinco Ports To India

இந்த ஒப்பந்தம், இரு அரசாங்கங்களின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.


சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது.

ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கும் அநுர அரசு : அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச | Handing Over Kankesanthurai Trinco Ports To India



இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும்.


காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்“ என தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இ-ஹெயிலிங் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

பெண்களை குறிவைத்து இணையத்தளத்தின் ஊடாக நிதி மோசடி: இருவர் கைது – Sri Lanka Tamil News

Next Post
பெண்களை குறிவைத்து இணையத்தளத்தின் ஊடாக நிதி மோசடி: இருவர் கைது – Sri Lanka Tamil News

பெண்களை குறிவைத்து இணையத்தளத்தின் ஊடாக நிதி மோசடி: இருவர் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin