
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது நடைபெறவுள்ள நமீபியாவுக்கெதிரான குழு ஏ போட்டியில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நமீபியாவின் அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அபிஷேக் ஷர்மா உடல்நிலை சரியில்லாததால் இப்போட்டியில் விளையாடாத நிலையில் அவரை சஞ்சு சாம்சன் அணியில் பிரதியிட்டிருந்தார்.
இது தவிர காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடியிருக்காத ஜஸ்பிரிட் பும்ரா இப்போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், மொஹமட் சிராஜ்ஜை அவர் அணியில் பிரதியிட்டுள்ளார்.

