• Login
Friday, February 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

வங்கதேச தேர்தல் 2026: ஆட்சியைத் தீர்மானிக்குமா புதிய 11-கட்சி கூட்டணி? விபரம் என்ன? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
வங்கதேச தேர்தல் 2026: ஆட்சியைத் தீர்மானிக்குமா புதிய 11-கட்சி கூட்டணி? விபரம் என்ன? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 12, 2026 4:27 PM IST

இந்தக் கூட்டணி, தேர்தல் முடிவுகளில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News18
News18

அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர்களின் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, 300 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) அடங்கிய கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

வங்கதேசத்தில் இன்று (பிப்ரவரி 12, 2026) மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், அரசியல் களத்தில் ’11-கட்சி கூட்டணி’ (11-Party Alliance) ஒரு புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அரசியலில் களம் இறங்கியுள்ள ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான் தலைமையில் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2024 புரட்சியில் முக்கியப் பங்காற்றிய மாணவர் தலைவர்களின் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) இணைந்திருப்பது மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.

பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அவாமி லீக் கட்சி இத்தேர்தலில் பங்கேற்காத நிலையில், இந்தக் கூட்டணி தற்போது வங்கதேச தேசியவாத கட்சிக்கு (BNP) ஒரு வலுவான மாற்றாகவும், நாட்டின் ‘மூன்றாவது சக்தியாகவும்’ தன்னை முன்னிறுத்துகிறது.

சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் இந்தத் தேர்தலில், இந்த 11-கட்சி கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிடுகிறது. குறிப்பாக ஜமாத் கட்சி மட்டும் 179 இடங்களில் நேரடியாகக் களம் காண்கிறது.

இதையும் படிங்க: Bangladesh Election 2026: விறுவிறுப்பாக நடைபெறும் வங்கதேச தேர்தல் வாக்குப்பதிவு… ரிசல்ட் எப்போது வெளியாகும்?

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து அரசியலமைப்பு மாற்றங்களுக்கான பொது வாக்கெடுப்பும் இன்று நடைபெறுவதால், இது வங்கதேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகப் பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினரின் ஆதரவைப் பெற்றுள்ள இந்தக் கூட்டணி, தேர்தல் முடிவுகளில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம் – Sri Lanka Tamil News

Next Post

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன்பெற்று சாதனை!

Next Post
சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன்பெற்று சாதனை!

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன்பெற்று சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin