Last Updated:
மக்களவையில் எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தி பதவி நீக்கம் மற்றும் தேர்தலில் வாழ்நாள் தடை தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் தீர்மானம் முன்மொழிந்துள்ளார் எம்.பி. நிஷிகாந்த் துபே.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக இந்தியாவின் வலிமையே மக்கள் தொகைதான். அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தரவுகள் முக்கியம். வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிற்கு மோடி விற்றுவிட்டார். அமெரிக்காவிற்கு சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாமல், மோடி அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோரிடையே தொடர்பு இருக்கிறது எனும் பகிரங்க குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
ஹர்தீப் சிங்
இதற்கு பதில் அளித்த ஹர்தீப் சிங், எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், ஐபிஐ தொடர்பாக அவரை மூன்று அல்லது நான்கு முறைதான் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிஷிகாந்த் துபே
இந்நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் மக்களவையில் தீர்மானம் முன்மொழிந்துள்ளார் எம்.பி. நிஷிகாந்த் துபே.
இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. நிஷிகாந்த் துபே, “இந்தியாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பும் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி எவ்வாறு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து இன்று மக்களவையில் ஒரு தீர்மானத்தை நான் கொண்டு வந்துள்ளேன்.
#WATCH | On LoP, Lok Sabha, Rahul Gandhi’s statement in Parliament, BJP MP Nishikant Dubey says,” I have moved a motion in Lok Sabha today against Rahul Gandhi on how he is misleading the nation with the help of forces like Soros, who want to harm the nation. In the motion I have… pic.twitter.com/MECVIGHdyh
— ANI (@ANI) February 12, 2026
நான் கொண்டு வந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவியை நீக்க வேண்டும் என்றும், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தேர்தலில் போட்டியிட ராகுல் காந்திக்கு வாழ்நாள் தடை…” – நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்த எம்.பி.


