Last Updated:
தஞ்சையில் கோப்பையை கைப்பற்றிய தமிழ்நாடு ‘ஏ’ அணி!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூரில், 36-ஆவது அகில இந்திய அளவிலான A கிரேடு கபாடி போட்டிகள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு, ஹரியானா, குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 18 மகளிர் அணிகளும், 16 ஆண்கள் அணிகளும் பங்கேற்றன. லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளின் இறுதி ஆட்டங்கள், மின்னொளி வசதியுடன் நேற்று இரவு நடைபெற்றன.
போட்டிகளை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.
இந்தப் போட்டிகளை காண, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

