தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றுக்கு இகா ஸ்வியாடெக், ரிபாகினா ஆகியோர் முன்னேறினர். இதில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் அதிரடியாக ஆடிய கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, சீனாவின் குயின்வென் ஜெங்குவை 2-6, 6-2,
7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.




