• Login
Thursday, February 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து…! கிடைத்தது அனுமதி

GenevaTimes by GenevaTimes
February 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து…! கிடைத்தது அனுமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.

அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் நஜித் இந்திக குறிப்பிட்டுள்ளார்.

“அரச நிர்வாகம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பான சட்டமூலம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

ஓய்வூதிய முறையை ரத்து

‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் நாம் முன்வைத்த ஒரு முக்கிய விடயமே, சில வருடங்கள் நாடாளுமன்றத்தில் பதவி வகித்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளும் இந்த ஓய்வூதிய முறையை ரத்துச் செய்வதாகும்.

இதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியச் சட்டமானது, இந்தப் புதிய சட்டத்தின் ஊடாக இல்லாதொழிக்கப்படும்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித ஓய்வூதியமும் கிடைக்காது.

மக்கள் சேவையாக மாத்திரம்

அதன் பின்னர், அரசியலை ஒரு மக்கள் சேவையாக மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

அரசியல் கலாசார ரீதியாகவும், தேர்தலுக்கு முன்னர் நாம் வழங்கிய வாக்குறுதிகள் ரீதியாகவும் இது மிகவும் முக்கியமான ஒரு படியாகும் என நாம் கருதுகிறோம்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக, நாம் எத்தகைய பாதையில் பயணிக்கிறோம் மற்றும் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்கிறோம் என்பது குறித்த உறுதியான செய்தியை மக்களுக்கு வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

மூத்த விரிவுரையாளர் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்க | Makkal Osai

Next Post

IND vs NAM | “இந்தியா செய்தது நியாயமே இல்லை…” – நமீபிய கேப்டன் ஆதங்கம்… பின்னணியில் சொல்லப்படாத சோகம்! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IND vs NAM | “இந்தியா செய்தது நியாயமே இல்லை…” – நமீபிய கேப்டன் ஆதங்கம்… பின்னணியில் சொல்லப்படாத சோகம்! | விளையாட்டு போட்டோகேலரி

IND vs NAM | "இந்தியா செய்தது நியாயமே இல்லை..." - நமீபிய கேப்டன் ஆதங்கம்... பின்னணியில் சொல்லப்படாத சோகம்! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin