Last Updated:
இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் 30 ரன்களும், ஜாஸ் பட்லர் 21 ரன்களும், ஜேக்கப் பெதேல் 33 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 15 ஆவது லீக் போட்டியாக குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இதனை காண ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாநது அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்க 196 ரன்கள் குவித்தது.
தொடக்க பேட்ஸ்மேன்கள் பிரான்டன் கிங் 1 ரன்னும், கேப்டன் ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்தவர்களில் ஹேட்மேயர் 23 ரன்களும், ராஸ்டன் சேஸ் 34 ரன்களும் எடுக்க, ஷெர்பேன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 7 சிக்சருடன் 76 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
அந்த அணிக்கு பிலிப் சால்ட் 30 ரன்களும், ஜாஸ் பட்லர் 21 ரன்களும், ஜேக்கப் பெதேல் 33 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதனை அடுத்து வந்தவர்கள் பயன்படுத்த தவறினர். சாம் கரன் மட்டும் 30 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார்.
Feb 11, 2026 11:57 PM IST


