Last Updated:
பஞ்சாப் மாநிலத்தில் கட்டிய மனைவியை கோடாரியால் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த கணவன், அந்த கொடூரத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.
பஞ்சாபில் மனைவியின் கழுத்தில் கோடாரியால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மிருகமாக மாறிய கணவன் ஈவு இரக்கமின்றி கொலைபாதக செயலில் ஈடுபட்டதன் பகீர் பின்னணி என்ன?
கட்டிய மனைவியை துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த கணவன், அந்த கொடூரத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளார். ஆடு, மாடு, கோழிகளை துடிக்க துடிக்க கழுத்தறுப்பது போன்று மூன்று குழந்தைகளின் தாயின் உயிரைப் பறித்த கணவன், போலீசில் சரணடைந்துள்ளார். நினைத்துப் பார்க்கவே ஈரக்குலையை நடுங்க வைத்த செயலில் ஈடுபட்டது ஏன்? நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்தீப் சிங். இவரது தந்தை பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். குல்தீப் சிங்கிற்கு ஹர்கீர்தன் என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் 6 முதல் 10 வயதிற்கு உட்பட்டவர்கள். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக தொடங்கிய இல்லற வாழ்க்கையில், அண்மைக் காலமாக புயல் வீசியுள்ளது. இதனால், தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை வெடித்துள்ளது.
இந்த நிலையில் குல்தீப் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர். அதில், தனது மனைவியை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்ததை பதிவிட்டுள்ளார். வீட்டில் வைத்து மனைவி ஹர்கீர்தனை அடித்து உதைத்து தரையில் கிடத்தியுள்ளார். குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தவரின் கழுத்தில் கோடாரியால் வெட்டியுள்ளார்.
உயிர் நோகக் கிடந்த அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் கையால் தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால், மிருகமாக மாறிய குல்தீப், கோடாரியால் கையை தள்ளிவிட்டு, மாறி மாறி கழுத்தில் வெட்டியுள்ளார். இடையே அவருக்கு மூச்சு இருக்கு என்று கூறியவாறு துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இறுதியாக உயிர் பிரிந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னரே கையில் வைத்திருந்த கோடாரியை கீழே போட்டுள்ளார். தனது மனைவியை கொடூரமாக கொலை செய்த குல்தீப் சிங், நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கட்டிய மனைவியை கோடாரியால் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த கணவன், அந்த கொடூரத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.


