Last Updated:
உஸ்மான் தாரீக்கின் பந்துவீச்சு ஆக்ஷன் நவீன கருவிகளின் உதவியுடன் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும்
சர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசும் பாகிஸ்தான் அணியின் பவுலர் உஸ்மான் தாரிக் மீது விசாரணை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
அவரது பந்து வீச்சு குறித்து பல அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்சேபம் தெரிவித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை ஐசிசி மேற்கொண்டுள்ளது.
கொழும்புவில் நடந்த அமெரிக்க அணிக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் பவுலர் உஸ்மான் தாரீக்கின் பந்துவீச்சு சைகை சர்ச்சையை கிளப்பியது.
பந்தை எரிவது போல் உஸ்மான் தாரீக்கின் சைகை இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் போட்டி நடுவர் முறையிட்டார். அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியத் தொடரிலும் தாரிக்கின் பந்துவீச்சு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக மீம்ஸ்களும் எழுப்பப்பட்டன. இந்நிலையில், சர்சை பந்துவீச்சு சைகை விவகாரத்தில் வியாழக்கிழமை பரிசோதனைக்கு ஆஜராகுமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இதில் உஸ்மான் தாரீக்கின் பந்துவீச்சு ஆக்ஷன் நவீன கருவிகளின் உதவியுடன் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும், மேலும் உஸ்மான் தாரீக் அணியும் இரு முழங்கை பேண்டுகளையும் ஆய்வு செய்ய உள்ளதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளை நிறைவு செய்தால் மட்டுமே வரும் 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் உஸ்மான் தாரீக் விளையாட அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் முத்தையா முரளிதரன், ஷோயப் அக்தர் உள்ளிட்டோரின் பந்துவீச்சுகளும் சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.


