Last Updated:
மக்களவையில் ராகுல் காந்தி, மோடி இந்தியாவை அமெரிக்காவிற்கு வர்த்தக ஒப்பந்தம் மூலம் விற்றதாக குற்றம்சாட்டினார்.
இந்தியாவை வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி விற்றுவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சர்வதேச பதற்றநிலையை கருத்தில் கொள்ளாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்தியாவின் வலிமையே மக்கள் தொகை தான் என்று கூறிய ராகுல் காந்தி, அமெரிக்காவிற்கு இந்தியர்களின் தரவுகள் முக்கியம் எனத் தெரிவித்தார். இந்நிலையில், வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை அமெரிக்காவிற்கு மோடி விற்று விட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, அமெரிக்காவிற்கு சமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தாமல், மோடி அழுத்தத்திற்கு ஆளானதாக விமர்சித்தார்.
“இந்தியாவை வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு பிரதமர் விற்றுவிட்டார்” – ராகுல் குற்றச்சாட்டு


