Last Updated:
வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 சரணங்களும் அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்பட வேண்டும். இந்த பாடல் 3 நிமிடங்கள் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்
அரசு விழாக்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 6 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது-
பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலில் உள்ள 6 சரணங்களும் அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்பட வேண்டும். இந்த பாடல் 3 நிமிடங்கள் 10 வினாடிகளில் பாடி முடிக்கப்பட வேண்டும்.
வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டதன் 150 ஆவது ஆண்டு நிறைவை குறிப்பிடும் வகையில் அந்த பாடலுக்கு இத்தகையை சிறப்பினை மத்திய அரசு அளித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கொடி ஏற்றப்படும்போதும், குடியரசு தலைவர் வருகை, புறப்பட்டு செல்லுதல், மற்றும் குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பாகவும், உரை முடிந்த பின்னரும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும்.


