• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்காவில் EXILE சட்ட முன்வடிவு அறிமுகம்.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏன் தெரியுமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
அமெரிக்காவில் EXILE சட்ட முன்வடிவு அறிமுகம்.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏன் தெரியுமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 11, 2026 3:10 PM IST

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் ஸ்டூப் அறிமுகப்படுத்தியுள்ள EXILE சட்ட முன்வடிவு இந்தியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Rapid Read
அமெரிக்கா
அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் ஸ்டூப் அறிமுகப்படுத்தியுள்ள EXILE சட்ட முன்வடிவு இந்தியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்கா வழங்கும் H-1B விசாவால் அதிகம் பயன் அடைபவர்கள் இந்தியர்கள். 80 சதவிகித H-1B விசாக்கள் பல ஆண்டுகளாக இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியர்களை பணியில் அமர்த்தவே விரும்புகின்றன. இந்த H-1B விசாக்கள் வழங்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அடிக்கடி கூறுவதுண்டு.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் ஸ்டூப் EXILE என்ற சட்ட முன்வடிவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியுள்ளார். Ending Exploitative Imported Labour Exemptions என்ற இச்சட்ட முன்வடிவு H-1B விசா முறையை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2027-ஆம் நிதியாண்டிற்குள் H-1B விசாக்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக குறைக்க இந்தச் சட்ட முன்வடிவு பரிந்துரைக்கிறது.

அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதால், தகுதியுள்ள அமெரிக்கப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை என்று ஸ்டூப் கூறியுள்ளார். ஸ்டூப் கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டால், லட்சக்கணக்கான இந்தியத் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் சட்டப்பூர்வமான தங்கும் உரிமையை இழந்து இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவாகும்.

பல இந்தியர்கள் கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கான அடிப்படை ஆதாரமாக இருக்கும் இந்த H-1B விசா ரத்து செய்யப்பட்டால், அவர்களின் நிரந்தரக் குடியுரிமைக் கனவு பறிபோகும். இது மட்டுமல்லாமல், இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி பணிபுரிய வைக்கும் ‘ஆன்-சைட்’ மாடல் முற்றிலுமாக முடங்கி போகும். H-1B வைத்திருப்பவர்களின் வாழ்கை துணைகள் வைத்துள்ள H-4 விசா தானாகவே ரத்தாகும். இதனால் ஒரே குடும்பத்தில் இருவருமே வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

தற்போதைக்கு இது ஒரு முன்மொழிவு மட்டுமே. இது சட்டமாவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் கையெழுத்தைப் பெற வேண்டும். EXILE சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தி உள்ள கிரெக் ஸ்டூப் புளோரிடா மாகாணத்தின் 17-வது நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சி உறுப்பினர். America First என்ற கொள்கையின் அடிப்படையில், வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அதிபர் டிரம்பும் இதே கொள்கையை கொண்டவர் என்பதால், இச்சட்டத்தை நிறைவேற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களை வலியுறுத்துவார்.

ஏற்கெனவே, H-1B விசாக்களுக்கான கட்டண உயர்வு, கடுமையான சமூக ஊடகத் தணிக்கைகள் என அமெரிக்காவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.. இந்நிலையில் EXILE சட்ட முன்வடிவு இந்தியர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்காவில் EXILE சட்ட முன்வடிவு அறிமுகம்.. இந்தியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏன் தெரியுமா?

Read More

Previous Post

Gold, Silver | ரூ.3 லட்சம் கோடியை தாண்டியது.. தங்கம், வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Next Post

அசாம் பாக்கியின் பங்குகளை வைத்திருப்பது குறித்து பொதுச் சேவைத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் – குவான் எங் – Malaysiakini

Next Post

அசாம் பாக்கியின் பங்குகளை வைத்திருப்பது குறித்து பொதுச் சேவைத் துறை விளக்கம் அளிக்க வேண்டும் – குவான் எங் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin