Last Updated:
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் திருமணத்திற்கு பிரதமர் மோடி, திரவுபதி முர்மு, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு நேரில் அழைப்பு.
மும்பையில் அடுத்த மாதம் 5ஆம் தேதி சச்சின் டெண்டுல்கரின் மகன் திருமண விழா நடைபெறுகிறது.
தனது மகன் திருமண விழாவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேரில் அழைப்பு விடுத்தார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த மாதம் 5ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இந்நிலையில், தனது மகன் திருமண விழாவில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை டெல்லியில் உள்ள அவரது மாளிகையில் சச்சின் டெண்டுல்கர் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
அப்போது, சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன், மணமகள் சானியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல, பிரதமர் நரேந்திர மோடியை, தனது குடும்பத்தினருடன் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்தார்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் அழைப்பு விடுத்தார். இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


