Last Updated:
நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி உள்ள நெதர்லாந்து அணி முதல் வெற்றியை இன்று பெற்றிருக்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மூன்று ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எளிதாக வென்றது.
இந்நிலையில் நமிபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி இன்று காலை 11 மணியளவில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் ஜான் நிக்கோல் 42 ரன்களும், ஜான் பிளையிங் 30 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர்
தொடக்க வீரர் மைக்கேல் லீவிட் 28 ரன்களும், மற்றொரு வீரர் மேக்ஸ் ஓடோ 7 ரன்களும் எடுத்தனர். அடுத்து இணைந்த பாஸ் லீடு மற்றும் ஆக்கர்மென் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு சென்றது.


