நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ‘நாடு ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் போது 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் கீழ் மொத்தமாக 791 சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 588 சோதனைகள் ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைச் சேர்ந்த குற்றச்செயல்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 11 பேர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

