திருமணம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள் மற்றும் மண்டபங்களில் பில் தொகை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், பான் எண் குறிப்பிட வேண்டியிருக்கும் நிலையில், இது ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், அசையா சொத்தை வாங்கும்போது, விற்பனை செய்யும்போதும் பான் எண் குறிப்பிடுவதற்கான தொகை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.

