Last Updated:
ராஜஸ்தானில் குழந்தையை கடத்திய ஜோடியை, பெற்றோரே காரில் துரத்திப் பிடித்து பாதுகாப்பாக மீட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானில் கைக்குழந்தையை கடத்திச் சென்ற ஜோடி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குழந்தையை பெற்றோரே சாமர்த்தியமாக மீட்டது எப்படி?
குழந்தையை பாதுகாப்பாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற தம்பதி, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஊரார் வீட்டுப் பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில் கடத்தலில் ஈடுபட்டதால் போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது… நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு தங்களது குழந்தையுடன் தம்பதி சென்றுள்ளனர். கூட்டத்தில் குழந்தை திடீரென காணாமல் போனதால் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது, பெண் ஒருவர் அந்த குழந்தையை கையில் வைத்திருந்ததைப் பார்த்துள்ளனர். அவர்கள் நெருங்கிச் செல்வதற்குள் அந்தப் பெண், தனது ஆண் நண்பருடன் குழந்தையை இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு விரைந்துள்ளார்.
உடனே சுதாரித்துக்கொண்ட குழந்தையின் பெற்றோர், தங்களது காரில் இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்தனர். கிராமப் பகுதிக்குள் பைக் நுழைந்தபோதும் விடாமல் துரத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் பைக்கை வழிமறித்து காரை நிறுத்தினர். கீழே இறங்கியதும் குழந்தையிடம் அவரது தாயார் ஓடியுள்ளார். ஆனால், கடத்தலில் ஈடுபட்ட பெண், அது தங்களது குழந்தை என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்டு ஆத்திரமடைந்த தந்தை, பெண்ணின் கையைப் பிடித்து மிரட்டியுள்ளார். அதற்கு, பெண்ணின் ஆண் நண்பர் வக்காலத்து வாங்கியுள்ளார். ஆத்திரம் தலைக்கேறியதும் குழந்தையின் தந்தை, அவர்கள் இருவரின் கன்னத்திலும் மாறி மாறி பளார் விட்டுள்ளார். இதையடுத்து, குழந்தையை பாதுகாப்பாக மீட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
குழந்தையை கடத்திய ஜோடியை, பெற்றோரே காரில் துரத்திப் பிடித்து பாதுகாப்பாக மீட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கைக்குழந்தையை கடத்திச் சென்ற ஜோடி… சாமர்த்தியமாக பின்தொடர்ந்து மீட்ட பெற்றோர்… பின்னணி என்ன…?


