Last Updated:
சிஎஸ்கே விசில் போடு விளம்பரம் மாற்றம் குறித்து காசி விஸ்வநாதன் பதில் அளிக்க மறுத்தார். தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
சிஎஸ்கே-வின் விசில் போடு விளம்பரத்தில் ஏதும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்ற கேள்விக்கு அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது சிஎஸ்கே அணியை மிகவும் பிரபலப்படுத்திய விளம்பரம் என்றால் அது சிஎஸ்கேவிற்கு விசில் போடு என்பது தான். விசில் போடு என்பது தான் சிஎஸ்கேவின் ஐகானாக இருந்து வந்தது. சிஎஸ்கே என்றாலே விசில் போடு என்பது தான் மைதானங்களில் ஒலிக்கும்.
இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் சிஎஸ்கே விசில் போடு விளம்பரத்தை பயன்படுத்துவார்களா என்று கேள்வி எழும்பியது.
இந்நிலையில் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசில் போடு விளம்பரம் பற்றி ஏதும் முடிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு அதைப்பற்றி நான் பேசவில்லை என்றார். மேலும் இந்த சீசனில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், அதை டீம் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அனைத்து மேட்ச்சிலும் தல விளையாட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். தோனி ஓய்வு குறித்து யாரிடமும் பேச மாட்டார் அதை அவர்தான் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.
Chennai,Tamil Nadu


