Last Updated:
பஞ்சாப் டார்ன் டரன் மாவட்ட சட்டக்கல்லூரியில் பிரின்ஸ் ராஜ், சந்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டு, பின்னர் தன்னை சுட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் மாணவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாணவர், தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டரன் மாவட்டத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் சககல்லூரி மாணவியை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர் வழக்கம் போல வகுப்பறைக்கு வந்தார். அப்போது அவர் தனது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சக மாணவியான சந்தீப் கவுரின் தலையில் துப்பாக்கியால் சுட்டார். அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், தனது தலையிலும் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்தில் மாணவி சந்தீப் கவுர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரின்ஸ் ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


