• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நம்பிக்கையுடன் வாக்களியுங்கள், பய உணர்வுடன் அல்ல: ஓவைசி வேண்டுகோள்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
நம்பிக்கையுடன் வாக்களியுங்கள், பய உணர்வுடன் அல்ல: ஓவைசி வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரப் பிரதேசத்தின் புல்பூரில் பேசிய மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, பிற்படுத்தப்பட்டோர், தலித், முஸ்லீம் சமூகத்தினர் கடந்த 50-60 ஆண்டுகளாக அச்ச உணர்வுடன் வாக்களித்து வருவதால், பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களை அழிக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேசத்தின் புல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வியாழக்கிழமை பேசிய ஓவைசி, ’’இதுவரை காங்கிரஸ், சமூகவுடைமை கட்சி, ஜனதா தளம், ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சிகளுக்கு வாக்களித்தீர்கள். ஆனால், உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. யாருக்கு வாக்களித்தீர்களோ, அவர்களின் தலைவிதி மாறிவிட்டது. தில்லி, லக்னௌவில் யாரை வெற்றி பெறச் செய்தீர்களோ, அவர்கள் இன்று நம்மை அழிக்க நினைக்கின்றனர்.

கடந்த 50-60 ஆண்டுகளாக அச்ச உணர்வுடன் வாக்களித்து வருகிறோம், அதனால்தான் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. நீங்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது நம்பிக்கை, அதை சரியாகப் பயன்படுத்துங்கள்” என்றார்.

பிற்படுத்தப்பட்ட, தலித், முஸ்லீம் ஆகியோரின் ஆதரவின் பேரில் ஓவைசின் ஏஐஎம்ஐஎம், பல்லவி படேலின் அப்னா தளத்துடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில், ஏஐஎம்ஐஎம் 95 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி 4.5 லட்சம் வாக்குகளைப் பெற்றது.

மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25-ம் தேதி பதோஹி, சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஜம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

Read More

Previous Post

யாழ் பல்கலைக்கழக கட்டட திறப்பு விழாவை எதிர்த்து கல்விசாரா ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

CSK Fans vs RCB Fans: பட்டாசு வெடித்து கொண்டாடியது முதல் மீம்ஸ் வரை.. ஆர்சிபி ஃபேன்ஸை வறுத்தெடுத்த சிஎஸ்கே ஃபேன்ஸ்

Next Post
CSK Fans vs RCB Fans: பட்டாசு வெடித்து கொண்டாடியது முதல் மீம்ஸ் வரை.. ஆர்சிபி ஃபேன்ஸை வறுத்தெடுத்த சிஎஸ்கே ஃபேன்ஸ்

CSK Fans vs RCB Fans: பட்டாசு வெடித்து கொண்டாடியது முதல் மீம்ஸ் வரை.. ஆர்சிபி ஃபேன்ஸை வறுத்தெடுத்த சிஎஸ்கே ஃபேன்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin