Last Updated:
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியை வீழ்த்திய அணி என்ற வரலாற்றை ஏற்படுத்தியிருக்கும்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியை வெல்லும் வாய்ப்பை, அனுபவம் இல்லாத நேபாள அணி 5 ரன்னில் இழந்தது. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பின்னர் நேபாள வீரர்களுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் நேபாள அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் ஜேக்கப் பெதேல் 55 ரன்களும், கேப்டன் ஹேரி ப்ரூக் 53 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்த வில் ஜாக்ஸ் 18 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நேபாள அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். தொடக்க வீரர் குஷால் பர்ட்டெல் 29 ரன்களும், கேப்டன் ரோஹித் படேல் 39 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.
தீபேந்திர சிங் 29 பந்துகளில் 44 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றிக்கான நம்பிக்கையை அளித்தார். கடைசி வரை களத்தில் நின்ற லோகேஷ் பாம் 20 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்தார்.
இந்நிலையில் நேபாள அணியின் சிறப்பான ஆட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் மும்பை வான்கிடே மைதானத்தில் ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டுக்களை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Feb 08, 2026 10:26 PM IST


