Last Updated:
மங்களூர் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.
வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டு விவசாய நிலத்தில் தனியார் இலகு ரக விமானம் விழுந்த நொறுங்கிய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு கலாபுரகி பகுதியில் இருந்து பெலகாவியை நோக்கி தனியார் விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் விமானியும் பயிற்சி விமானியும் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயபுரா மாவட்டம் மங்களூர் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதனை சரி செய்யும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டிருந்தார்கள்.
இருப்பினும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வயல் வெளியில் நொறுங்கி விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த இருவரும் காயங்களுடன் கிராம மக்களால் மீட்கப்பட்டனர்.


