Last Updated:
கேரள மாநிலம் திருவல்லாவில் திருச்சூரைச் சேர்ந்த நபர் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டருக்கு குட்டப்புழா பாப்பினிவெளியைச் சேர்ந்த ரவுடி சுபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கடி, மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
கேரள மாநிலம் திருவல்லாவில் மசாஜ் சென்டரில் மாமூல் கேட்டு ரவுடியிசத்தில் ஈடுபட்ட கும்பல், பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது. கத்தி முனையில் மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் வரம்பு மீறியவர்களின் வக்கிர செயலில் நடந்தது என்ன?
மசாஜ் சென்டரில் புகுந்து, பெண் ஊழியரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த, ஈவு இரக்கமற்ற கொடூரக் கும்பலின் ரவுடியிச காட்சிகள் வெளியாகியுள்ளன. அடிக்கடி மசாஜ் சென்டருக்கு சென்று மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பல், கத்தி முனையில் வக்கிரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். பிடிக்கச் சென்ற போலீசார் மீது வளர்ப்பு நாயை ஏவி கடிக்க விட்டு, ஆவேசத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவை உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கின் திடுக்கிடும் பின்னணி என்ன?
கேரள மாநிலம் திருவல்லாவில் திருச்சூரைச் சேர்ந்த நபர் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டருக்கு குட்டப்புழா பாப்பினிவெளியைச் சேர்ந்த ரவுடி சுபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கடி, மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று மசாஜ் சென்டரின் ஓனர் இல்லாத நேரம் அத்துமீறி உள்ளே நுழைந்த கும்பல், 50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது பணியில் இருந்த பெண் ஊழியர் பணம் இல்லை எனக் கூறி ரவுடி சுபினிடம் தெரிவித்துள்ளார்.
அதில் ஆத்திரம் அடைந்த சுபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பெண் ஊழியரை மசாஜ் சென்டர் அறையில் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை செல்போனில் வீடியோவாக எடுத்து எல்லை மீறியுள்ளனர். கத்தி முனையில் மிரட்டல் விடுத்ததால் உயிருக்குப் பயந்து கத்தக் கூட முடியாமல் அப்பெண் பெரும் கொடுமைக்கு ஆளாகி உள்ளார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்றொரு ஊழியரையும் மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
நடுநடுங்க வைத்த இச்சம்பவம் தொடர்பாக முதலில் அச்சப்பட்டு போலீசில் புகாரளிக்காமல் இருந்த பெண், பின்னர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, துணிந்து காவல் நிலையம் சென்றுள்ளார். சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். உடனே, திருவல்லா காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி, திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட 11 பிரிவுகளில் ரவுடியிச கும்பல் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ரவுடி சுபினை பிடிக்கச் சென்றபோது தான் வளர்த்துவந்த நாயை ஏவி காவலர்கள் இருவரைக் கடிக்க விட்டுள்ளார். அதில் காயமடைந்த எஸ்.ஐ. உன்னிகிருஷ்ணன் மற்றும் சி.பி.ஓ அபிலாஷ் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்படியொரு கொடூரச் செயலில் ஈடுபட்ட ரவுடி சுபின் மீது ஏற்கனவே பல வழக்குகள் கேரள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
மிரட்டி பணம் பறிப்பு, அடிதடி என யாருக்கும் அஞ்சாமல் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்ததால் கேரளாவின் சமூக விரோத செயல்களுக்காக காபா தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடங்காமல் ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் தனது ரவுடியிச வேலையை அரங்கேற்றிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் கேரளா முழுக்க பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா: மசாஜ் சென்டரில் மாமுல் கேட்டு ரவுடிசம்… பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வக்கிர கும்பல்…


