Last Updated:
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக விளையாடி 49 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்தார்.
இந்திய அணியின் பேட்டிங் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ள கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மும்பையில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது.
முன்னணி பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா 0, சிவம் துபே 0, ரின்கு சிங் 6, ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இஷான் கிஷன் 20, திலக் வர்மா 25, அக்சர் படேல் 14 ரன்கள் எடுத்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்பாக விளையாடி 49 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 161 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. அடுத்து விளையாடிய அமெரிக்கா அணி 132 ரன்கள் மட்டு எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுகுறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், நிலைமை கையை மீறிச் செல்லும் போது, தலைவன் என்ன செய்யப் போகிறார் என்பதைத்தான் எல்லோரும் எதிர் பார்ப்பார்கள். சூர்யா ஒரு உண்மையான கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங்கை நீங்கள் கவனமில்லாத ஆட்டம் என்று அழைக்கலாம் என கூறியுள்ளார். ஷிவம் துபே (0), ரிங்கு சிங் (6) மற்றும் ஹர்திக் பாண்டியா (5) என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற பரிதாப நிலைக்கு நேற்று தள்ளப்பட்டது. இதனை அறிவுப்பூர்வமான பேட்டிங் அல்ல என்றும் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

