நீர்கொழும்பு துன்கல்பிடிய கடற்கரை வீதிக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ராஜகிரிய காவல்துறை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று (7) மாலை முன்னெடுத்த தேடுதலின் போது, குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, பிரான்சில் தயாரிக்கப்பட்ட 7.65 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் துன்கல்பிடிய காவல்நிலையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… |

