கோவிஷீல்ட் தடுப்பூசி அரிதாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்ட நிலையில், மேம்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து அந்நிறுவனம் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டதால் தங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஒப்புக் கொண்டது. இது, அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொரோனாவிற்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான தேவை குறைந்ததால், அதன் உற்பத்தியை நிறுத்தி விட்டதாகவும், இனி இந்த தடுப்பூசியை பயன்படுத்த மாட்டோம் என்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க வணிக ரீதியாக எடுத்த முடிவு என்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
