• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாட்ரிக்குடன் ஒரே ஓவரில் 4 விக்கெட்.. மேட்ச் ரிசல்ட்டை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெபர்ட் | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஹாட்ரிக்குடன் ஒரே ஓவரில் 4 விக்கெட்.. மேட்ச் ரிசல்ட்டை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெபர்ட் | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 07, 2026 8:27 PM IST

18.5 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த ஸ்காட்லாந்து அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

News18
News18

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் ஒரே ஓவரில் ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த ஓவரில் ஆட்டத்தின் ரிசல்ட்டையே மாற்றியுள்ளது.

இந்த மேட்ச்சில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

தொடக்க வீரர்கள் பிரான்டன் கிங் 35 ரன்களும், கேப்டன் ஹோப் 19 ரன்களும் எடுத்தனர். 3 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மேயர் 36 பந்துகளில் 6 சிக்சர் 2 பவுண்ரியுடன் 64 ரன்கள் குவித்தார். ரோமன் பவெல் 24 ரன்களும், ரூதர் போர்டு 26 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 182 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 19 ரன்னும், பிரான்டன் மெக்கல்லன் 14 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 24 பந்துகளில் 42 ரன்களும், டாம் ப்ரூஸ் 28 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தபோது அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை ஸ்காட்லாந்து வீரர்கள் மத்தியில் ஏற்பட்டது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

18.5 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த ஸ்காட்லாந்து அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியின்போது 17 ஆவது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்ட் வீசினார். அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் மேத்யூ கிராஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்த 2 பந்துகளில் மைக்கேல் லீஸ்க் மற்றும் ஆலிவர் டேவிட்சன் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற, ஹாட்ரிக் சாதனை படைத்தார் ரொமாரியோ ஷெப்பர்ட். கடைசி பந்தில் சபியான் ஷரிப் ஆட்டமிழக்க மொத்தம் 9 விக்கெட்டை ஸ்காட்லாந்து இழந்தபோது வெஸ்ட் இண்டீசின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டது.

17 ஆவது ஒவரை அற்புதமாக வீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டத்தின் ரிசல்ட்டையே மாற்றியுள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Read More

Previous Post

RSS 100 years: “ஆர்.எஸ்.எஸ். அரசியலில் நேரடியாக தலையிடாது” – மோகன் பகவத் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன? – விரிவாக இதோ! | World News (உலக செய்திகள்)

Next Post
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன? – விரிவாக இதோ! | World News (உலக செய்திகள்)

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்ன? - விரிவாக இதோ! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin