தங்கத்தின் தொடர் விலை உயர்வால், தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் குடும்பங்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.117 டிரில்லியன் அளவுக்கு உயர்ந்திருப்பதாக தனியார் வங்கி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய குடும்பங்கள் வளம் தற்போது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, 10 ஆண்டுக்கு முன்பு 1 சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ. 26,343 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,25,368 ஆக அதிகரித்துள்ளது. தங்கம் என்பது மிகப்பெரிய அசையும் சொத்தாக உள்ளது. அந்த சொத்தின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால், நகைகளை கையிருப்பில் வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பங்களும் பெரிதும் பயனடைந்துள்ளன. புதிதாக தங்கத்தை வாங்கமலும், விற்காமலும் கூட இவ்வளவு பெரிய ஆதாயத்தை அடைந்துள்ளன.

