அகமதாபாத்: அகமதாபாத்தில் மே 22-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர் சி பி அணியும் பலப்பரீட்சை நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த ஆர் சி பி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நன்றாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 பந்து மீதம் இருக்கையில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்யாசத்தில் ஆர் சி பி அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
தொடக்கம் முதலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்து 4 தோல்விகளை கண்டது. ஆனால் ஆர் சி பி அணியானது தான் விளையாடிய 16 போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

