Last Updated:
பிரதமர் மோடி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், தனது நண்பரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சென்றார்.
இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், தனது நண்பரும் மலேசிய பிரதமருமான அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகள் நிலையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தனது பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகள் இடையேயான ஒருங்கிணைந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த உறவுகளை ஆழப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வாழும் பாலமாக வாழும் இந்திய வம்சாவளியினரை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Delhi,Delhi,Delhi
Feb 07, 2026 11:55 AM IST


