Last Updated:
பஞ்சாப்பில் பட்டப்பகலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பின் குருத்துவாரா அருகே ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் லக்கி ஓபராய், காரில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியது யார்? கொலையாளிகள் சிக்குவார்களா? குருத்வாரா அருகே பட்டப்பகலில் அரங்கேறிய படுகொலை சம்பவத்தின் பின்னணி என்ன?
பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய். இவர் வெள்ளிக்கிழமை (06.02.2026) காலை ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார். அவர் வாகனத்தை குருத்வாராவுக்கு முன்பு நிறுத்திக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
ஜீப்பிலிருந்து கீழிறங்க முயன்ற லக்கி ஓபராயை மர்ம நபர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளனர். துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாய்ந்து காரின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு லக்கி ஓபராயின் உடலை துளைத்துச் சென்றது. மர்ம நபர்கள் சுமார் 5 ரவுண்டுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வானத்தை நோக்கி சுட்டவாறு இருவரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் லக்கி ஓபராய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர்.
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகள் யார்? எதற்காக இந்த படுகொலை சம்பவத்தை அரங்கேற்றினார்கள்? அவர்களுக்குள் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப்பில் பட்டப்பகலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் சுட்டுக் கொலை… படுகொலை சம்பவத்தின் பின்னணி என்ன…?


