அதேநேரம், தொடக்க ஆட்டக்காரர் சூர்யவன்ஷி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். பந்தை நாலாபுறமும் சிதறடித்த அவர், சதம் அடித்தார். தொடர்ந்து, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்த வன்ஷி, 175 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். 80 பந்துகளை எதிர்கொண்ட அவர், 15 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


