அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் நகரப் பகுதியை தாக்கிய சூறாவளியால், அங்கிருந்த காற்றாலைகள், காகிதங்கள் போல கிழிந்து பறந்துள்ளன. சூறாவளி கடந்து சென்ற இடங்களில் இருந்தவற்றை எல்லாம் தனது ஆக்ரோஷ சுழலில் கொண்டு சென்ற இந்த சூறாவளியில் சிக்கி, நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
தூதர்களை திரும்பப் பெறும் இஸ்ரேல்.. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நிலையில் முடிவு!
இந்த சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்கவே ஒரு வாரம் ஆகலாம் எனவும் மாகாண அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பள்ளிகள், அலுவலகங்கள் செயல்படவில்லை எனவும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள், காற்றாலைகள், சாலைகளை சீரமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
