Last Updated:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, காயத்தால் பயிற்சி போட்டியில் இருந்து வெளியேறினார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, காயத்தால் பயிற்சி போட்டியில் இருந்து வெளியேறினார்.
நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் போது ஒரு ஓவர் மட்டுமே வீசிய 24 வயதான ஹர்ஷித் ராணா, 16 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
பந்து வீசும் போதே இரண்டு முறை தனது ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்திய அவர், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். சிறிது நேரத்திலேயே தனது முழங்காலைப் பிடித்தபடி மைதானத்தில் அமர்ந்த அவர், பின்னர் நொண்டியபடியே வெளியேறினார். அதன்பின் அவர் களத்திற்குத் திரும்பவில்லை.
ஏற்கனவே ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் காயமடைந்து இன்னும் அணியுடன் இணையாத நிலையில், ராணாவின் இந்த காயம் டி20 இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், ஹர்ஷித் ராணாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைக்காக ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் வாரியமும் காத்திருக்கிறது.


