
கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ்பிரிவின் கதிரேசன் தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் ஆட்டுப்பட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்.
காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து நேற்று (04) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (News21)

