இது தொடர்பாக பேட்டியளித்த இந்திய ஐவுளி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன், அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தம் மகிழ்ச்சிகரமான விஷயம், இந்த வரி குறைப்பு அறிவிப்பிற்காக தினமும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது 50 சதவீத வரியினை 18 சதவீதமாக குறைத்துள்ளது எனவும், இது மற்ற போட்டி நாடுகளை விட இரண்டு சதவீதம் குறைவாகவும், சைனாவை விட 15 சதவீதம் குறைவாகவும் வரி இருக்கின்றது எனவும் இது இந்தியாவிற்கு சாதகமான அறிவிப்பு என தெரிவித்தார்.


