நம் நாட்டு மக்களின் நலனிற்காகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் பல அருமையான திடங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரியின் முக்கியமான திட்டங்களின் ஒன்றின் மூலம் பீகாரைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் சிறு தொழில் எப்படி லாபகரமாக முன்னேறியது என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள காதர்மாலா என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார் தேவேந்திர ஷா. இவர் பாட்னா தொலைதொடர்பு துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார். எனினும் சில பல காரணங்களுக்காக திடீரென்று இவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளனர். இதனால் பிழைப்பதற்கு வேறு வழியின்றி தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார் ஷா.
பின்னர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினார். ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் விவசாயத்தில் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை என்பதால் பால் விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார் ஷா. தனது கிராமத்திலிருந்து மொத்தமாக பாலை வாங்கி அதனை அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று விற்பனை செய்தார். எனினும் இந்த தொழிலிலும் தேவேந்திர ஷாவிற்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
இதையும் படிங்க:
பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்… இணையத்தின் உதவியால் ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ் ஆப்பை உருவாக்கி அசத்திய இந்திய இளைஞர்!
இந்நிலையில் பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என அவர் நண்பர் ஒருவர் அறிவுரை கூறவே, உடனடியாக அந்த தொழிலை தொடங்கினார். ஆனால் அந்த சமயத்தில் அவருடைய நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் சிறிய அறையிலேயே தனது தொழிலை ஆரம்பித்தார்.
இவருடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் வங்கியில் மேனேஜராக இருக்கிறார். அவர்தான் பிரதம மந்திரி முத்ரா திட்டம் (PMMY) குறித்தும், இந்த திட்டத்தின் கீழ் தொழில் விரிவாக்கத்திற்கு எளிதாக கடன் பெறலாம் என்றும் ஷாவிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு சந்தோஷமடைந்த ஷா, இந்த திட்டத்தின் கிழ் விண்ணப்பித்து ரூ.10 லட்சம் கடனாகப் பெற்றார். 2021-ம் ஆண்டிலிருந்து இவருடைய தொழில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. தற்போது வைஷாலி மட்டுமின்றி முசாஃபர்பூர், மோதிபூர் போன்ற நகரங்களுக்கும் தனது பால் பொருட்களை விநியோகித்து வருகிறார். தற்போது இவரது கடையில் ஆறு நபர்கள் வேலை செய்து வருகின்றனர்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தேவேந்திரா ஷா மூன்று வகையான தயிர்களை விற்பனை செய்கிறார். இதன் விலை முறையே ரூ.60, ரூ.65 மற்றும் ரூ.75 ஆகும். இவரிடம் ரூ.8, ரூ.10, ரூ.15 என மிகவும் குறைவான விலையில் இனிப்புகள் கிடைக்கின்றன. தற்போது மாதம்தோறும் ரூ.80,000-க்கும் மேல் வருவாய் ஈட்டுவதாகவும், அதற்கு முக்கிய காரணம் பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம் தான் என நன்றியோடும் முக மலர்ச்சியோடும் கூறுகிறார் தேவேந்திர ஷா.
.
&w=750&resize=750,375&ssl=1)
