Last Updated:
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டதாக மக்களவையில் அறிவித்தார்.
திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எல்.முருகன், திரைப்படச் சட்டம் 1952 மற்றும் திரைப்பட சான்றிதழ் விதிமுறைகள் 2024-ன் படியே மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
அதில் விதிமுறை பிரிவு 37-ன் படி, திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க 48 வேலை நாட்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக எல்.முருகன் தெரிவித்தார். அதே சமயம் ஆன்லைன் முறை அமலாக்கத்திற்கு வந்த பின்னர், சான்றிதழ் வழங்குவதற்கான கால அவகாசம் 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதன்படி, திரைப்படங்களுக்கு 18 நாட்களுக்குள்ளும், குறும்படங்களுக்கு 3 நாட்களுக்குள்ளும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்று எல்.முருகன் தெரிவித்தார். மேலும் திரைப்படங்களை மறு ஆய்வு குழுவிற்கு அனுப்புவதற்கான கால அவகாசமும் விதிமுறைகளில் இடம்பெற்றிருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.


