கோலாலம்பூர், பிப்ரவரி 5:
பத்துமலை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 19-வது மாடியிலிருந்து விழுந்து 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.49 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் செலாயாங் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கீழே விழுந்த வேகத்தில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
இது குறித்து கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முஹமட் நாசீர் கூறுகையில்: “முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் மரணத்தில் எவ்விதக் குற்றச் செயல்களும் (Foul play) நடந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. எனவே, இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.”
உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.




