Last Updated:
உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் நிகழ்ச்சியில் பங்கேற்றார்
2050-க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ‘ஜியோ-பிளாக்ராக்’ (Jio-BlackRock) உரையாடல் நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி மற்றும் உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் ஆகியோர் வர்த்தகம் சார்ந்த ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது-
இந்தியா 8% முதல் 10% வரையிலான வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும்; விரைவில் நாம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதையும் பார்க்க முடியும்.
பிரதமர் மோடி வழங்கியுள்ள நிலையான தலைமை மற்றும் தெளிவான கொள்கை முடிவுகளே இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம். 2050-க்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் (ரூ. 2,712 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாறும் என்பது உறுதி என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய லாரி ஃபிங்க் இந்தியாவின் சகாப்தம்” என்று வர்ணித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது- இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.
குறிப்பாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது. ஒரு சிறந்த முதலீட்டாளரின் பணி ஒவ்வொரு சந்தை சலசலப்பிற்கும் எதிர்வினையாற்றுவது அல்ல. மாறாக நாட்டின் நீண்டகால வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து நிலைத்திருப்பதே ஆகும். என்று தெரிவித்தார்.


