Last Updated:
சத்தீஸ்கர் பிலாஸ்பூர் பகுதியில் பிரேக் அப் காரணமாக ரோஷினி சூர்யவன்ஷி, கம்தா பிரசாத் என்பவரை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரேக் அப் செய்த காதலனை நெஞ்சில் கத்தியால் குத்தி இளம்பெண், கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கம்தா பிரசாத் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ரோஷினி சூர்யவன்ஷி என்ற 22 வயது இளம்பெண்ணை உருகி உருகி காதலித்து வந்தார். ஆரம்பத்தில் எல்லாம் இனிக்கத்தான் செய்யும் ; போக போக கசப்பு தெரியும், கையோடு கழுத்தை நெரித்து கதையை முடிக்கும். இது பிரசாத்திற்கு மட்டும் என்ன, விதி விலக்கா? நாட்கள் செல்ல செல்ல உண்மை முகத்தைக் காட்டிய ரோஷினி, காதலனைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் கைக்குள் அடக்கி கண்ட்ரோலில் வைத்துள்ளார்.
யாரிடமும் பேசக்கூடாது. எந்நேரமும் தனக்காகவே இருக்க வேண்டும். தனக்காகவே வாழ வேண்டும் என அழுத்தம் போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். அதில் நொந்து, வெந்து போன பிரசாத், இனி இது சரிப்பட்டு வராது என முடிவெடுத்து காதலை பிரேக் அப் செய்து விட்டு குப்புற கவுந்துள்ளார். விடிந்ததும் எழுந்து காதலியின் செல்போன் எண், இன்ஸ்டா ஐடி என அனைத்தையும் ப்ளாக் லிஸ்டில் போட்டு விட்டு நிம்மதியாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதை எதிர்பார்க்காத ரோஷினி, காதலனை தொடர்பு கொள்ள முயன்று சோர்ந்து போனார். தோழியின் எண்ணில் இருந்து அழைத்தபோது, ரோஷினியின் குரலைக் கேட்டதும் சட்டென்று இணைப்பை துண்டித்துள்ளார். சும்மாவே கோப வெறியில் கோடாரி தைலம் பூசியது போல சிணுங்கும் ஹோகினிக்கு, பிரசாத் தன்னை Avoid செய்கிறார் என்பது, கொழவிக்கு கொடுக்கு முளைத்த கதையாய் ஆத்திரத்திம் அடைந்துள்ளார்.
உடனே புறப்பட்டு நேரமாக காதலனின் வீட்டிற்கே சென்றுள்ளார். “ஏன் என்னை வெறுக்கிறாய்? ஏன் ப்ளாக் செய்தாய்?”. “இவ்வளவு நாள் காதலித்த நான் முட்டாளா? அப்படியெல்லாம் ஈசியாக விட்டு விட முடியாது” என சண்டை போட்டு சம்பவம் செய்துள்ளார். “புதுசா எதாவது பெண்ணை பிடித்து விட்டதா? இந்தகாதலர் தினதுக்கு அவளுடன் தான் கொண்டாட்டமா? ” என இஸ்டத்திற்கு பேசியுள்ளார். அதற்கு “உன்னுடன் வாழ்ந்தது போதும் ; இனியும் என்னை தேடாதே, காதலும் கிடையாது நான் உன் காதலனும் கிடையாது என பிரசாத் சத்தம் போட்டுள்ளார்.
அதில் பெருமூச்சு விட்ட ரோஷினி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து “தனக்கு இடம் இல்லாத இந்த இதயத்தில் இனி யாரும் குடியேறக்கூடாது” என்ற வெறியில், நெஞ்சில் ஆழமாக ஒரே குத்து குத்தியுள்ளார். அதில் இதய நரம்பு கிளிந்து பிரசாத் அங்கேயே சுருண்டு விழுந்து, ரோஷினி கண் எதிரே துடிதுடிக்க உயிரிழந்தார். இப்படியொரு படுபயங்கர கொலைக்குப் பிறகு அறையில் சிந்தியிருந்த ரத்தக் கறைகளைத் துடைத்து விட்டு தடையங்களை மறைக்க முயன்றுள்ளார்.
ஆனால் அலற சத்தம் கேட்கும் போதே அக்கம்பக்கத்தினர் சிவில் லைன் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட, அடுத்த 10 நிமிடத்தில் போலீசார் அங்கு வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பிரசாத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த கறைகளுடன் தப்பிக்க முயன்ற காதலி ரோஷினியை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். வல்லவன் படத்தில் ரீமாசென் போல சைக்கோ காதலால் அரங்கேறிய சம்பவம் ஒட்டுமொத்த சத்தீஸ்கர் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
Chandigarh,Chandigarh,Chandigarh


