பாலியல் புகார் வழக்கில் சிக்கியதால் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவாக இருக்கும் பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி, காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரஜ்வலுக்கு, தேவகவுடா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், உடனடியாக நாடு திரும்பி வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், இல்லாவிட்டால் தனது கோபத்திற்கு பிரஜ்வல் ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும், ஆனால், தனது எச்சரிக்கையை மீறினால் குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவது உறுதி என்றும் தேவகவுடா எச்சரித்துள்ளார்.
பிரஜ்வல் மீதான வழக்கு விசாரணையில், தங்கள் குடும்பத்திடம் இருந்தோ, தன்னிடம் இருந்தோ எந்தவித தலையீடும் இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள தேவகவுடா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே தனது எண்ணம் என தெளிவுபடுத்தி உள்ளார்.
மேலும் படிக்க:
வங்கதேச எம்.பி. இந்தியாவில் படுகொலை… துண்டுதுண்டாக வெட்டி வீசிய கொடூரம்!
கடந்த 60 ஆண்டுகளாக தனது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் மக்களின் நன்மதிப்பை மீண்டும் பெறுவதே இப்போதைய தேவை என சுட்டிக்காட்டியுள்ள தேவகவுடா, உயிருடன் இருக்கும்வரை தன்னை ஆதரித்த மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
